இலங்கையில் புதைந்துள்ள மர்மம்! பூதங்களாக வெளிக்கிளம்பிய சுரங்கம்!

இலங்கையில் அரசர்கள் பயன்படுத்திய சுரங்கப்பாதை ஒன்று வெளிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் மீகஹாகிவ்ல பிரதேசத்தில் நீண்டகாலமாக காணப்பட்ட ஏரி ஒன்று திடீரென மாயமானது.

long walk way in dark tunnel with light

இது குறித்த விசாரணைகளின் போது அந்தப் பகுதியில் மன்னர்கள் பயன்படுத்திய சுரங்கப் பாதை இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி மீகஹாகிவ்ல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதான கால்வாய் ஒன்று திடீரென காணாமல் போயிருந்தது.

கஹாகிவ்ல பிரதேச செயலக பிரிவுக்கு சொந்தமான கோமாரிக்கா விவசாய நிலத்திற்கு நீர் விநியோகிக்கும் வெல்லேவல டீ-2 என்ற பிரதான கால்வாயின் நீர் காணாமல் போயிருந்தது.

கால்வாயின் இடையே ஏற்பட்டுள்ள பாரிய துளை ஊடாக நீர் பாய்ந்து செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 15 அடி ஆழமான பாரிய துளை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், பாரிய சத்தத்துடன் நீர் அதனுள் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் வலகம்பா அரசர் ஆட்சி செய்த பல இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசரின் அந்தரங்க பயணங்களுக்காக அந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

அந்தப் பகுதியில் குகை ஒன்றின் ஊடாக சுரங்க பாதை செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் பல மர்மங்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் திடீரென காணாமல் போன இந்த நீர் எங்கு சென்றது என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மீகஹாகிவ்ல பிரதேசத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்த ஏரி திடீரென காணாமல் போனமையினால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.