காதல் தோல்வி!! சற்று முன் பிளேற்றால் தனது கழுத்தை அறுத்த யாழ் இளைஞன்

காதலித்த பெண் வேறு ஒருவரை கரம் பிடித்ததினால் மனவிரக்தி அடைந்த முன்னாள் காதலன் கத்தியினால் தனது கழுத்தி வெட்டி தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியசிங்கம் வீதி ஆவரங்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த 23வயதுடைய இளஞனே தவறான முடிவெடுத்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 636395546079198479-1608771957_maxresdefaultஇச் சம்பவம் இன்று  காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்து. வன்னியசிங்கம் வீதி ஆவரங்கால் சவுந்தரராஜன் கார்த்தீபன் வயது(23) பகுதியினை சேர்ந்த மேற்படி இளஞன் யாழ் நகரரில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றி வருவதாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற இளஞன் கடந்த பல வருடங்காள யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலித்த யுவதி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெற்றோர் நிச்சியத்த ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவ் யுவதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த யுவதி, யாழ் நகரிற்கு இரண்டு பிள்ளைகளுடன் வந்துள்ளதை கண்ட இளஞன் மனம் நொந்து போயிருந்ததாக சக நண்பர் கூறினர்.

அத்துடன் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு போயிருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் குறித்த இளஞன் இன்று(24) காலை தனியார் நிறுவனத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உடமையில் வைத்திருந்த கத்தியினால் தனது கழுத்தினை வெட்டி தற்கொலை செய்ய முயற்ச்சித்துள்ளார்.

இதனை கண்ணுற்ற ஏணை பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு இளஞனை காப்பாற்றியதுடன், யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பித்தனர்.