ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகலில் இடம்பெற்றது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவர முன்னர் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவதாக பிரசார மேடைகளில் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.