பல்வேறு சமூக நலன்களை பெற ஆதார் அட்டை அவசியம் எனவும், அதற்காக ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சிலர் தங்களது ஆதார் எண்ணை அரசு ஆவணங்களோடு இணைத்து வருகிறார்கள். ஆனால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை அடுத்த பெருங்குளத்தூர், சீணிவாச நகர் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி என்ற 82 வயது மூதாட்டி. வங்கி கணக்கு வைத்திருக்கும் மூதாட்டிக்கு ஆதார் அட்டை அவசியம் என்று வங்கி மேலாளர் தெரிவித்ததால் நேற்று டோக்கன் பெற்று சென்றார்கள். இன்று வந்து உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவரசர ஊர்தியின் உதவியுடன் தாம்பரம் வருவாய் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு பதிந்துள்ளனர். ஆதார் பெறுவதற்கு புகைப் படம் மற்றும் கை ரேகை வைத்து பதிவு செய்யப்பட்டு பின் அழைத்துச் சென்றார்கள். இதுகுறித்து மூதாட்டி தெரிவிக்கையில், என்னால் வர இயலவில்லை கஷ்ட்டபட்டு வந்தேன் வேதனையுடன் தெரிவித்தார் .
அந்த மூதாட்டியின் வீடியோ காட்சியானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.