கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் tick bites எனும் உடலைத் துளைக்கும் உண்ணிகள் கடித்ததனால் ஏற்பட்ட ஆபத்தான படங்களை தனது முக நூலில் முற்படுத்தியுள்ளார்.
சன் டிகோ பகுதியில் வசிக்கும் ஜெனிபர் வெலஸ்கெக்ஸ் எனும் பெண்மணியேதனது வலது காலில் ஏற்பட்ட பயங்கரமான அந்த மாற்றத்தை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் குறித்த புகைப்படப் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் ஒரு பூசணிச் செடியைப் பார்வையிட்ட பிறகு கடுமையான அரிப்புடன் கூடிய சிவப்பு நிறப் பொட்டுப்பொட்டான தோல் மாற்றத்தினை உணர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்,
”பூசணிச் செடிகள் உள்ள இடங்களின் அழகினை ரசிப்பதற்காகவும் புகைப்படங்கள் எடுப்பதற்காகவும் செல்பவர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது, அதாவது இவ்வாறான இடங்களுக்குச் செல்பவர்கள் நீளமான காற்சட்டையை மட்டுமல்லாது முழங்கால்வரையான சப்பாத்தினை அணிந்து செல்லவேண்டும். இல்லையேல் எனக்கு நிகழ்ந்த கொடூரமான நிலை தான் ஏற்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரொக்கி மலைத்தொடரிலுள்ள அழகான நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கச் சென்றபோதே இந்த நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது.
“என்னால் நடக்கமுடியவில்லை, கால் மட்டுமல்லாது முழு உடலுமே அளப்பரிய வலி, எனது தலைமுடிகள் வேகமாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன, மொத்தத்தில் நான் ஒரு இறந்த மனிதருக்கு ஒப்பாகவே நடைப்பிண வாழ்க்கையினை வாழ்கின்றேன்.” என்று கவலையோடு எழுதியிருந்தார்.
மேலும் இந்த பாதிப்பினை தான் இப்பொழுதும் தொடர்ச்சியாக அனுபவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து மற்றவர்கள் மிகுந்த அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரொக்கி மலைத்தொடரைச் சார்ந்த பகுதிகளில் இதுபோன்ற முறைப்பாடுகள் அண்மைய ஆண்டுகளில் ஏராளமாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் இந்த உண்ணியானது மரங்கள் நிறைந்த பகுதிகளிலும் புல்வெளிகளிலும் பரந்து காணப்படுகிறது. இதனால் கடியுண்டவர்கள் தோல் ஒவ்வாமை மட்டுமன்றி காய்ச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் கடுமையான தசைவலி போன்றவற்றை அனுபவிக்கவேண்டிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.