உலகையே உலுக்கிய கப்பல் விபத்தான டைட்டானிக் கப்பல், பனிப்பாறையில் மோதி மூழ்கியபின் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் இந்த வாரம் ஏலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குறித்த புகைப்படங்கள் நியூயோர்க் சமூக அக்கறையாளரான Louis M அவர்களின் scrapbook எனப்படும் படங்களை ஒட்டும் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
Ogden எனும் சட்டத்தரணி தான் குறித்த புகைப்படங்களைப் பிடித்தவராவார். இவர் கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவி அகதாவுடன் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டபோது டைட்டானிக் கப்பலில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதாவது டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதியதால் விரைவாக மூழ்குவதாக தகவல் கிடைத்தது.
பின்னர் கார்பதியா எனும் நீராவிக் கப்பல் குறித்த இடத்திற்கு விடியற்காலையில் வருகைதந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. Ogden, மூழ்கிய கப்பலின் ஒரு பகுதியில் ஏறி நின்று குறித்த மீட்புப் பணிகளை புகைப்படமாக எடுத்துக்கொண்டார்.
Ogden, பயணத்திற்கு ஒரு புதிய புகைப்படக் கருவியை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் அவ்வேளையில் செல்வந்தராக இருந்தாலும் புகைப்படக் கருவி வாங்குவதென்பது மிகவும் அரிதான ஒரு காரியமாகும்.