தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் இறுதியாக குழந்தைகளுக்கு காட்டிவிடுவோம்.. பிரகாஷ் ராஜ் பகீர்

சென்னை: தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச அரசு தனது சுற்றுலாத்தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மகாலை அண்மையில் நீக்கியது.

தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்தது.

CedBmgiW8AEMbbaஇது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்து என்பதாலேயே தாஜ்மஹால் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்து கோயிலை இடித்துவிட்டு ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியதாக உத்தரப்பிரதேச அமைச்சர் ஒருவர் கூறினார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தாஜ்மஹாலின் அடித்தளத்தை தோண்ட ஆரம்பித்துவிட்டீர்கள், எப்போது இடிக்கிறீர்களோ முன்னதாக சொல்லிவிடுங்கள் குழந்தைகளுக்கு கடைசியாக தாஜ்மஹாலை காண்பித்து விடுகிறோம்.. என தெரிவித்துள்ளார்.

tweeta  தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டிவிடுவோம்.. பிரகாஷ் ராஜ் சுளீர் tweeta
தாஜ்மஹால் குறித்த நடிகர் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

கர்நாடக பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பதாக பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்திருந்தார்.

பிரதமர் மோடி தன்னை விட சிறந்த நடிகர் என்றும் அவர் சாடியிருந்தார். இதுதொடர்பாக பிரகாஷ் ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பாஜகவை சீண்டும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.