யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

“ஒர் ஆணை எது அழகாக்குகிறது?” என் பெண் தோழிகளுடன் ஒரு குளிர்கால மாலையில் தேனீர் அருந்த அமர்ந்தபோது எங்களுக்குள் விவாதமாக எழுந்த கேள்வி இது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

அவர் மிகவும் உயரமானவராகவோ, மிகவும் மெலிந்தவராகவோ இருக்கக் கூடாது என்றாள், உயரம் குறைவாகவும், கொஞ்சம் பருமனுடனும் இருக்கும் என் தோழி ஒருத்தி. “கொஞ்சம் குண்டாக இருந்தால் கூடத் தவறில்லை. அப்போதுதான் அவரின் உடல் மெலிவுடன் பொருந்த நான் பட்டினி கிடைக்க வேண்டிய அவசியம் இருக்காது,” என்று அவள் சொன்னாள்.

“பருமனாகவும் தொப்பையாகவும் இருப்பவர்களை நான் கையாள விரும்பவில்லை. அவர்கள் கிட்டத்தட்ட அசிங்கமானவர்கள். அதேபோல், உடல் ரோமங்கள் அதிகம் இருப்பவர்களும் எனக்கு வேண்டாம்,” என்றாள் இன்னொருத்தி.

டைட்டானிக் படத்தில் லியானர்டோ டி கேப்ரியோ வரையும் ஓவியத்தைப்போல நகங்களை அழகுபடுத்தியிருக்கும் ஆண்தான் எனக்கு வேண்டும் என்று அவள் தன் விருப்பங்களில் விவரனைகளைத் தொடர்ந்தாள்.

சுருண்ட முடிகளை விரும்பிய தோழி ஒருத்தியும் அங்கு இருந்தாள். கறுப்பும் செந்நிறமும் கலந்த சுருண்ட முடி ஆண்தான் அவளது விருப்பமாக இருந்தது.

“அவர் கண்ணாடி அணிந்திருந்தால் இன்னும் நல்லது. அது கேக் மீது வைக்கப்படும் செர்ரிப்பழம் போன்றது,” என்றாள் அவள்.

ஆறடி உயரம், வெளுத்த அல்லது மாநிறத் தோற்றம், கருத்த கேசம், வலுவான கைகள் போன்ற வழக்கமான விருப்புகள் அவர்கள் யாரின் பட்டியலிலும் இல்லை என்பது எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

அப்போது திரைப்படக் கதாநாயகர்களின் தோற்றங்கள் என் மனக்கண்ணில் தோன்றிக்கொண்டிருந்தது.

சொல்லப்போனால், அவர்கள் ஒரே ஒரு நாயகனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அங்கு நாயகர்கள் பல விதமானவர்களாக, வழக்கமான பழைய வர்ணனைகளுக்குள் சிக்காதவர்களாக இருந்தார்கள்.

“கேரளப் பெண்கள் அழகா? தமிழகப் பெண்கள் அழகா?” என்ற தலைப்பை ஒரு தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்திருந்தது பற்றி அவர்களின் பேச்சு ஆரம்பித்தது ஒன்றும் வியப்பாக இல்லை.

ஆனால், அவர்களின் விவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அந்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதம் செய்வதையேதான் அவர்களும் செய்தனர். இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த பெண்களின் உடல் தோற்றத்தைப் பற்றிய விவாதம் அது.

உடல் தோற்றம் என்ற அளவில் சுருக்கி பெண்களை ஒரே வரையறைக்குள் அடைக்க முடியாது.

ஒரு மாநிலத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்க முடியாது. என் பக்கத்து வீட்டுப் பெண் அவளது உடைகள் மூலம் அவளை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமே என்னிடம் இருந்து வேறுபடுகிறது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியோ ஒரு சமூக வலைதள வாக்கெடுப்பு நடத்தி இதை மேலும் ஒரு படி கொண்டு சென்றது.

அந்த விவாத நிகழ்ச்சி பெண்களை காட்சிப்பொருளாக்குவதாக போராட்டங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

கடைசியில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் இருந்து பின் வாங்கிய அந்த தொலைக்காட்சி, அந்த நிகழ்ச்சியின் முன்னோட்டங்களையும் இணையத்தில் இருந்து நீக்கியது.

என் பெண் தோழிகளின் அந்த தேனீர் விருந்து, பழைய சிந்தனைகளை நிலைநாட்டி, அழகு என்னும் வரையறைக்குள் பெண்களை அடைத்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இருந்துவிட முடியாது என்பதற்கான கொண்டாட்டமே.

ஆனால், அவர்கள் ஏன் ஆண்களை காட்சிப்பொருளாக்கி அவர்களின் உடல் தோற்றம் குறித்து விவாதிக்கிறார்கள் என்று நான் அவர்களை கேட்டேன்.

அவர்களின் நகைச்சுவைத் திறன், கல்வி, அரசியல் நம்பிக்கைகள் போன்ற ஆளுமை குறித்த விடயங்களை ஏன் நீங்கள் விவாதிக்கவில்லை என்று நான் கேட்டேன்.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

“அதுவும் ஒரு நபரின் அழகைப் பற்றிய விவாதம் தானே?” என்றும் நான் கேட்டேன்.

ஆனால் எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள்.

அதுதான் பிரச்னை என்று நான் கூறினேன். புறத் தோற்றத்தின் அடிப்படையில், முதல் பார்வையில், அழகான ஆண்களை எனக்கும் பிடிக்கும்.

ஆனால் , ஆணோ பெண்ணோ ஒரு நபரை நகைச்சுவைக்காகவேனும் அழகு என்னும் வரையறைக்குள் அடைத்தால் நாம் அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறோம்.

அதனால்தான் பல பெண்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். அது யாரையும் காயப்படுத்தாத ஜனரஞ்சகமான நகைச்சுவை என்று கருதி அந்த தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளது.

ஆனால் அத்தைகைய யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவைகள் தேவையற்ற, உடல் நலத்திற்கு எதிரான உணவு முறை, மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, எடை குறைப்பு அறுவைசிகிச்சை ஆகியவற்றுக்கு வழிவகுப்பதில்லையா?