கல்வியியல் கல்லூரி ஆசிரியர் விவகாரம் தொடர்பில் இன்று ஜனாதிபதியை சந்திக்க முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் தீர்மானம் எடுத்துள்ளார்.
வெளிமாகாணங்களுக்கு நியமனம் பெற்றுள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம் எஸ் சுபைர் தீர்மானித்துள்ளார்.
இன்றையதினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கவுள்ளதாக முன்னாள் மாகாண அமைச்சர் எம்,எஸ் சுபைர் குறிப்பிட்டார்,
ஆசிரியர்கள் பதவிகளை பொறுப்பேற்பதற்கான கால எல்லை விரைவில் நிறைவடையவுள்ளதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து ஆசிரியர்களுக்குமான தீர்வை தாம் பெற்றுத் தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுபைர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை இவர் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்தியில் சுகாதார அமைச்சராக கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டித்தக்கது,