தெலுங்கில் மெர்சல் சென்சார் முடிந்து வெளிவந்துள்ளது, 27 ஆம் தேதி ரிலீஸ்..!

தெலுங்கில் மெர்சல் சென்சார் முடிந்து வெளிவந்துள்ளது, 27 ஆம் தேதி ரிலீஸ்..!

தமிழில் மெர்சல் வெளிவரும் அன்றே தெலுங்கிலும் வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெலுங்கு சென்சார் வேலைகள் முடிவடையாததால் தீபாவளியன்று படம் தெலுங்கில் வெளியாகவில்லை. அதனால், இந்த வாரம் 27ம் தேதி வெளியாகலாம் என்று சொன்னார்கள். அதே சமயம், அதுவும் உறுதியாகாமலே இருந்தது. தற்போது தெலுங்கு மெர்சல் படமான அதிரிந்தி படத்திற்கு யு-ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, நாளை மறுநாள் 27ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் படம் வெளியாக உள்ளது.

தெலுங்கில் மெர்சல் சென்சார் முடிந்து வெளிவந்துள்ளது, 27 ஆம் தேதி ரிலீஸ்..!

தமிழில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் தெலுங்கிலும் அதே போலவே கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. தமிழில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரம், ஜிஎஸ்டி வசனம் ஆகியவை தெலுங்கில் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து இன்னும் தகவல் வரவில்லை. தமிழில் ஏற்பட்ட சர்ச்சையால் தெலுங்கில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் மெர்சல் சென்சார் முடிந்து வெளிவந்துள்ளது, 27 ஆம் தேதி ரிலீஸ்..!