விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் வெளியாகி அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இரண்டாவது வாரத்தை இந்தப் படம் எட்டியுள்ளதால் அதற்கான பேனர்களை திருவனந்தபுரத்தில் கட்டிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய கேரள விஜய் மக்கள் இயக்கம், திருவனந்தபுரம், செயலாளர் லவ் டுடே ஸ்ரீநாத் என்பர் பேருந்து மோதி காலமானார்.
இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான இவரை மையமாக வைத்து உருவான போக்கிரி சைமன் என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவந்தது. ஸ்ரீநாத்தின் திடீர் மரணம் கேரள விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்கிரி சைமன் படத்தில் ஸ்ரீநாத் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அப்பானி சரத், தகவல் அறிந்ததும் ஸ்ரீநாத் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க விஜய், தன் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்களும் தங்களது ரசிகர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.