தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் சுமார் 3,200 திரையரங்குகளில் மெர்சல் படம் வெளியானது. இந்நிலையில் , மெர்சல் படத்தின் வசூல் 5 நாளில் 150 கோடியை தொட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மெர்சல் படக்குழுவினர் ஆழ்ந்தமகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, தெறியை விட அதிகளவு வசூலை மெர்சல் குவித்துள்ளது.
மெர்சல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 47.1கோடி, இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளில் 23.5 கோடி வசூல் செய்தது.
கேரளாவில் மலையாள படங்களை பின்னுக்குத்தள்ளி 6.11 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் ,இலங்கையில் சுமார் 83 திரையரங்குகளில் வெளியான மெர்சல் படத்தின் முதல் 5 நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.
அதன்படி , முதல் 5 நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் வரை மெர்சல் படம் வசூலித்துள்ளதாக பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்திற்கு சோதனை மேல் சோதனை வந்தாலும், அதை சாதனையாக படக்குழு மாற்றி இருக்கிறது.
மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தகூடாது என்ற பிரச்சனை தொடங்கி , கேளிக்கை வரி அதிகரிப்பு , விலங்குகள் நல வாரியம் , சென்சார் என்று பிரச்சனைகள் தொடர்ந்தது.
ஆனால் ஒருவழியாக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு கடந்த தீபாவளி தினத்தில் படமும் வெளியானது. எனினும், தமிழக பாஜக உறுப்பினர்கள் படத்திற்கு போர்க்கொடி தூக்கினார்கள்.
படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறினார். இதையும் தாண்டி மெர்சல் திரைப்படம் தனது வெற்றியைபதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது