அக்டோபர் 21 ஆன இன்றைக்கு தான் தான் ஆல்ஃபிரட் நோபல் பிறந்தார். யாரிந்த ஆல்ஃபிரட் நோபல்? உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இவர் பெயரில் தான் வழங்கப்படுகிறது.
தன் பெயரில் உலகிலேயெ மிக உயரிய கொடுக்குமளவிற்கு அவர் யார்? என்ன செய்தார் தெரியுமா? நோபல் பரிசுப் பற்றிய சில சுவாரயத்தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆல்ஃபிரட் நோபல் : அக்டோபர் 21 1833 அன்று ஸ்வீடனில் பிறந்தார் நோபல்.பொறியாளர் குடும்பத்தில் பிறந்த இவர் வேதியலையும், பொறியியலையும் கற்றுத் தேர்ந்தார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்கை இவர்தான் கண்டுபிடித்தார். மிகப்பெரிய பணக்காரரான இவர் தன் சொத்தின் பெரும் பகுதியை தன்னுடைய கண்டுபிடிப்புகளாலேயே பெற்றார்.
சிந்திக்க வைத்த செய்தி :
1888 ஆம் ஆண்டு பிரஞ்சு செய்தித்தாள் ஒன்று மரணத்தின் வியாபாரி இறப்பு என்று ஆல்ஃபிரட்டின் இறப்பு செய்தியை தவறுதலாக வெளியிட்டது. இந்த தவறான செய்தி தான் ஆல்ஃபிரட்டின் சிந்தனையையே மாற்றியிருக்கிறது.
தான் இறந்த பிறகு மக்கள் மனதில் எப்படி நினைவு கொள்ளப்படுவோம் என்ற கவலை அவருக்கு வந்து விட்டது.மிகுந்த யோசனைக்குப் பிறகு தன்னுடைய உயிலை மாற்றி எழுதினார்.
ஆச்சரியப்படுத்திய உயில் :
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த உயிலில் அப்படி என்ன எழுதியிருந்தது தெரியுமா? தனது சொத்தின் பெரும்பகுதி ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு’ பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை முறைப்படுத்தவும் “நோபல் அறக்கட்டளை” அமைக்கப்பெற்றது.
கூட்டுப் பிரதேசம் : ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்தது. இதனை வலியுறுத்தும் விதமாக வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா நடைபெறும்.
விற்பனை : தாங்கள் வாங்கிய நோபல் பரிசனை சிலர் விற்கவும் செய்திருக்கிறார்கள். இதுவரை விற்கப்பட்டது இரண்டே இரண்டு நோபல் பரிசுகள் தான். லியன் லீடர்மெண்ட் எனப்படும் நபர் 1988 ஆம் ஆண்டு மியூன் நியூட்ரினோ கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். பின்னர் தன்னுடைய மருத்துவச் செலவுக்காக தான் வாங்கிய நோபல் பரிசினை விற்றார்.
காந்தி : நோபல் பரிசு விதிகளின் படி உயிருடன் இருப்பவர்களுக்கே நோபல் பரிசு வழங்கப்படும். இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஆனால் 1948 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறப்போகிறவர்களின் பட்டியல் வெளியிட இரண்டு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் நோபல் பரிசு வழங்க முடியாத சூழல் ஏற்ப்பட்டது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் : உலகிலேயே மிகப்பெரிய அறிவியளாலரும் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
ஆனால் இங்கே விஷயம் அதுவல்ல, ஐன்ஸ்டீன் தன் மனைவி மெலிவா மெரிக்கிடம் விவாகரத்து கேட்ட போது வீட்டிலிருந்த சொத்துக்கள் பிரிக்கப் பட்டன. அப்போது ஐன்ஸ்டீனின் நோபல் பரிசுத்தொகை மெலிவாக்குச் சென்றது.
24 மணி நேரங்கள் : நோபல் பரிசு வாங்குபவர்கள் பரிசு வாங்கும் மேடையில் நேரடியாக பேச முடியாது. ஏன் தெரியுமா?
செல்லுலார் ட்ரான்ஸ்ப்போர்ட்டில் ஆராய்ச்சி மேற்கொண்டவரான ரேண்டி ஸ்கீமென், விருது பெறப்போகிறவர்கள் தாங்கள் மேடையில் என்ன பேசப் போகிறோம் என்பது 24 மணி நேரங்களுக்கு முன்னரே இங்கே கொடுத்திட வேண்டும். அப்போது தான் அதனை ஸ்வீடிஷ் மொழி பெயர்க்க முடியும் என்றார்.
சிறையில் : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பரிசு கொடுக்கும் போது சிறையில் இருந்தனர். ஜெர்மனைச் சேர்ந்த Carl von Ossietzky பர்மாவை சேர்ந்த அரசியல்வாதி Aung San Suu Kyi சீனாவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி Liu Xiaobo
வயது : எல்லா பிரிவுகளிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறவர்களின் சராசரி வயது 59. இதில் மிகவும் வயதான நோபல் பரிசுப் பெற்றவர் Leonid Hurwicz இவர் தன்னுடைய 90 வது வயதில் நோபல் பரிசுப் பெற்றார்.
அதே போல மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசுப் பெற்றவர் மலாலா யூசப்ஃபாய். இவர் தன்னுடைய 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
கணவன் மனைவி : மேரி க்யூரி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.ஒன்று 1903 ஆம் ஆண்டு தன் கணவர் பெர்ரீ க்யூரியுடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசுப்பெற்றார்.
பின்னர் 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசனைப் பெற்றார்.