காதல் நாடகமாடி மூன்று ஆண்களை ஆட்டுவித்த பெண் : மந்திரவாதியை மடக்கிப் பிடித்த பொலிஸார்

தம்புள்ளை பகுதியில் பெண் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தம்புள்ளை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நபர் ஒருவருக்கு கத்தியால் குத்த முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக” தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களுக்கிடையில் பலத்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டிருந்த ஆண்களில் ஒருவர் தன்னை குத்த இடுப்பில் கத்தி ஒன்றை சொருகி வைத்துக் கொண்டு தன்னை மிரட்டியதாக மற்ற ஆண் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த நபரை சோதித்த பொலிஸார் அவரின் இடுப்பில் சொருகி இருந்த கத்தியை கைப்பற்றியதோடு குறித்த நபர் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளனர்.

loveகைது செய்த ஐவரையும் விசாரணை செய்ததில் குறித்த பெண் ஆண்கள் மூவருடனும் ஒரே சமயத்தில் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் காதலர்களில் முதலாவது காதலர் குறித்த பெண் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

இவ்வாறிருக்க தனது காதலி வேறொரு ஆணுடன் தம்புள்ளை நகருக்கு வந்துள்ளார் என கிடைத்த தகவலை அடுத்து குறித்த இளைஞன் மந்திரவாதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர்; மந்திரவாதி காதலியை தனது மந்திர சக்தியால் குறித்த இளைஞனோடு சேர்த்து வைப்பதாக ஒப்புதல் அளித்து இளைஞனை தம்புள்ளை நகருக்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

முதலாவது காதலரும் மந்திரவாதியும் தம்புள்ளை நகருக்கு வரும் போது குறித்த பெண் இரண்டாவது காதலனோடு பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து கதைத்துக் கெண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெண்ணின் மூன்றாவது காதலர் பெண்ணின் கையை பின்புறமாக மடக்கி கட்டி விட்டுள்ளார்.

தம்புள்ளை பஸ் தரிப்பிடத்தில் சந்தித்துக் கொண்ட பெண்; மற்றும் அவரது முதலாவது  இரண்டாவது மூன்றாவது காதலர்கள் மந்திரவாதி ஆகியோருக்கிடையில் வாக்கு வாதம் அரங்கேறியுள்ளது.

அங்கு மந்திரவாதி பெண்னோடு இருந்த இரண்டாவது காதலனை பெண்னை விட்டு போகவில்லையாயின் கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதை அருகில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த மூன்றாவது காதலரே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குறித்த பெண்னையும் மூன்று காதலர்களையும் கடும் எச்சரிக்கையின் பின்னர் தம்புள்ளை பொலிஸார் விடுவித்துள்ளனர்.

கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மந்திரவாதியை விளக்கமறியலில் வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.