தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ரோபோ சங்கரும் ஒருவர். அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது: எனது பெயரில் எந்த டுவிட்டர், பேஸ்புக் கணக்கும் கிடையாது. ஆனால் யாரோ சிலர் என் பெயரில் கணக்கு ஆரம்பித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள்.
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தை காப்பாற்றாமல் பத்திரிகையாளர்கள் படம் எடுத்தார்கள் என்று நான் சொன்னதாக தவறான கருத்தை பதிவிட்டுள்ளார்கள். அந்த கருத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இதுபோன்று பல செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். போலி டுவிட்டரில் வரும் செய்திகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவதூறு பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.