யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறி கோரி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம் சமூகம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த இந்த சத்தியாக்கிரக போராட்டத்தின்போது யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களுமென கலந்துகொண்ட போராட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
யாழ் மாவட்டத்தில் முஸ்லிம் மக்மக்களுக்கான வீட்டுத் திட்டத்தில் ஒரு சில தமிழ் அதிகாரிகள் இனத்துவேசத்துடன் செயற்படுவதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தினை உடனடியாகவும் முழுமையாகவும் அமுல்ப்படுத்தவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.