முடிந்தால் மூன்று நாட்களுக்கு மேலான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துக் காட்டுங்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு சுகாதார அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தினை முன்னிட்டு பத்தரமுல்லவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட முடியாதவர்களில் பிரதானமானவர்களே வைத்தியர்கள்.அவர்கள் ஏழு தினங்களும் பணிபுரிய வேண்டியவர்கள். அவ்வாறான நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்களாயின் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
அவர்களின் தாயார்களையும், பிள்ளைகளையும், வீடுகளையும் கூட மக்கள் பார்த்துக்கொள்வார்கள் எனவும் மூன்று நான்கு நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்களாயின் அதன் விளைவை அவர்கள் அறிய முடியும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.