தமிழகம் முழுவதுமாய் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாட்களுக்கும், இன்னபிற விழாக்களுக்கும் பெருநிறுவனங்களின் விளம்பரங்களுக்காகவும் கட் -அவுட் மற்றும் பேனர் வைத்திடும் கலாச்சாரம் உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்புகளும், எதிர்பாராத விபத்துகளும் நிகழ்கின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்-அவுட், பேனர் தொடர்பான வழக்கு ஒன்று கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளபோதிலும் கட்-அவுட், பேனர் கலாச்சாரத்தினால் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் தொந்தரவுகளை தடுக்க இயலவில்லை என வருத்தம் தெரிவித்ததுடன், இனி தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு கட்- அவுட் வைக்ககூடாதென்ற அதிரடி உத்தரவினை பிறப்பித்தார்.
இந்நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தின் பேனர் ; கட் – அவுட் தொடர்பான உத்தரவினை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் முறையிட தமிழக அரசு முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.