கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிட்டிய சுகாதானந்த தேரர் ஆகிய பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

images (81)