விஜய் ரசிகர்களும் ஒன்று திரளும் 29 ம் தேதி! என்ன ஸ்பெஷல்?

மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி சில சர்ச்சைகளுக்கு உட்பட்டாலும் வசூல் பல இடங்களிலும் நல்ல நிலையில் உள்ளது. இதற்கான பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்த தகவல்களை நமது சினிஉலகத்தில் பதிவிட்டிந்தோம்.

பிளாக் பஸ்டர் லிஸ்டில் இடம் பெற்ற இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே இப்படம் சில சாதனைகளை இணையதளங்களில் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

1vijay1இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாட நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் வரும் அக்டோபர் 29 ம் தேதி, ஞாயிறு காலை 8.30 மணிக்கு மெர்சல் படத்தின் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இதில் விஜய் மக்கள் இயக்கங்கள் இணைந்து நடத்திகிறார்களாம். இதை முதல் நாள் முதல் காட்சி போல கொண்டாடுங்கள், முன் பதிவு இன்று ஆரம்பம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Capturexddg ds