மோடி அரசின் சாதனை திட்டமாக பாஜகவினரால் பேசப்படுவது டிஜிட்டல் இந்தியா திட்டம்.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மின்மயமாக்கி, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நோக்கம் என்று கூறப்பட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தணையில் பல சிக்கல்கள், குளறுபடிகள் இருக்கின்றது என்று அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அது ஒருபக்கம் இருந்தாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அனைவரும் மாறியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆன்லைன் பரிவர்தனைகளுக்கு டிஜிட்டல் செஸ் (Digital Cess) என்னும் வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, இ-வாலட்கள், ஆன்லைன் பேங்க் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன.
இதனால், அதற்கும் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, பணமதிப்பிழப்பு விவகாரம், ஆதார், ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளால் மக்கள் அல்லாடி கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ‘டிஜிட்டல் செஸ்’ என்று புதிய வரியை மத்திய அரசு புகுத்துவது நியாயமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.