தீபாவளிப் பண்டிகைக்காக அன்புடன் வாங்கி வந்த உடுப்புகளை மனைவி உதாசீனம் செய்ததுடன் வாய்க்கு வந்த வார்த்தைகளை அள்ளி வீசியதால் ஆத்திரமுற்ற கணவன் கையில் கிடைத்த தும்புத்தடியால் விளாசித் தள்ளினார்.
இந்தச் சம்பவம் தென்மராட்சி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மனைவி மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்ற வேளையில் பொலிஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தையடுத்து பொலிஸார் கணவரைக் கைது செய்தனர்.
அவர் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை எச்சரித்த நீதிவான் 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்தார்.