இந்திய கடற்படை வீரர்கள் எந்நேரமும் பதில் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரி நாடுகளின் எல்லை பிரச்சனை மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் சீனா தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரித்து வருவது நட்புகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடற்படை அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் இந்திய நாட்டின் கடற்படையை பலம் பொருந்தியதாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கடற்படை எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.