சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலையில் திடீர் திருப்பம்..? தனியார் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை..!

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சென்னை குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சிகிச்சைக்கு பிறகு நடராஜன் உடல் உறுப்பின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது; அடுத்த சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

large_1484073036-784நடராஜன் புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமாவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் தான், அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா.

அந்த சமயத்தில் தான் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.