ஸ்டாலினுடன் ஆலோசனை..? குண்டைதூக்கிப்போடும் எடப்பாடி.. நேற்றிரவே அலைமோதிய அதிமுக வட்டாரம்..!!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகத்தின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்காக ஆடம்பர பேனர்கள், வளைவுகள் என நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தான் அலங்கோலங்களின் ஒரு கோலமாக திருச்சியில் நடந்த விழாவும் அமைந்தது.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி,

யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என மக்களுக்கு தெரியும்.டெங்குவை கட்டுப்படுத்த எங்களுக்கு ஆலோசனை சொல்லாமல், கேலி செய்து வருகிறார் ஸ்டாலின்.

தமிழகத்தில் இப்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டது. டெங்குவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.ops edaஇப்போது டெங்குவை கட்டுப்படுத்த எங்களுக்கு ஸ்டாலின் ஆலோசனை சொல்லலாமே என்று கேட்டும் எடப்பாடி, டெங்கு பாதிப்பு தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் முதலில் பாதிப்பை ஏற்படுத்திய பொழுது, மருத்துவர் என்ற முறையில் பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் இராமதாஸ் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான தீர்வையும், ஒருவேளை பாதிப்பு கைமீறினால் மருத்துவ அவசர நிலையையும் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அப்போதே ஆலோசனை கூறினார்.

அதனை பொருட்படுத்தாததன் விளைவு இன்றைக்கு டெங்குவால் இறப்பு எண்ணிக்கை மூன்று இலக்கத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

தற்போது, அதிமுக ஆட்சியை பற்றி வசை மொழி பாடி வரும் திமுகவிடமே, ஆலோசனை கூறுமாறு எடப்பாடி பேசியுள்ளது, அதிமுக கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.