தற்போது நிலவும் காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து கரையோர பிரதேசங்களிலும் கிடைக்கும் மீனின் தொகை அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடையில் உள்ள மத்திய மீன் விற்பனை நிலையத்தின் விற்பனையாளர்களுடன் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதில், பலவகையான மீன்கள் தற்போது பெருமளவில் கிடைப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தெற்கு கரையோரம் அடங்கலாக நாட்டின் ஏனைய கடற்கரையோர பிரதேசங்களில் இருந்து இந்த மீன்கள் வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
முக்கிய மீன்வகைகள் பெருமளவில் கிடைப்பதினால் அவற்றின் விலைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.தற்பொழுது இவ்வாறான மீன்கள் 1 கிலோ 100 ரூபாவிற்கும் 150 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக ரின் மீன்வகைகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு, நிதியமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.