தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சி ஏற்பாடு செய்திருந்த, மக்கள் சந்திப்பானது, மட்டக்களப்பு செல்வாநகர் காளி கோவில் முன்றலில் நேற்று நடைபெற்றது.
இச்சந்திப்பானது, ஆரையம்பதி பிரதேச இணைப்பாளர் எஸ்.சுபகாந் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் செயலாளர் வ.கமலதாஸ், ஊடக பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான எஸ்.வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்சியின் கொள்கை விளக்கங்கள் ,எதிர்கால தேர்தல் தொடர்பான செயற்பாடுகள், பெண்கள் தேர்தலின் பங்கேற்பு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.