ஜெ மரணம்.. துவங்கியது நீதி விசாரணை ; வெளியாகுமா உண்மை.!

ஜெ மரணம்.. துவங்கியது நீதி விசாரணை ; வெளியாகுமா உண்மை.!

முன்னாள் முதல்வரும், நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாகவும் உள்ள அதிமுகவின் தலைவராகவும் இருந்த ஜெயலலிதா அவர்களின் மறைவில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் பலதரப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தோரும், மக்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ஜெ மரணம்.. துவங்கியது நீதி விசாரணை ; வெளியாகுமா உண்மை.!

இந்நிலையில், எழிலகம் கலசமஹாலில் அமைக்கப்பட்டுள்ள தனது அலுவலகத்தில் இன்று விசாரணையை துவக்கியுள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

3 மாதத்திற்குள்ளாக ஜெ மரணம் குறித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டுமென அரசு தெரிவித்துள்ள நிலையில், இன்று விசாரணையை துவக்கியுள்ளார் நீதிபதி ஆறுமுகசாமி.