சாதி ஒழிப்பற்ற தமிழ்த்தேசியம் சாத்தியமில்லை : இயக்குனர் ரஞ்சித் !!

சாதி ஒழிப்பில்லா தமிழ்த்தேசியம் வேண்டியதில்லை - இயக்குனர் ரஞ்சித்.!

சாதி ஒழிப்பற்ற தமிழ்த்தேசியம் சாத்தியமில்லாததென தெரிவித்துள்ளார் இயக்குனரும், தயாரிப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பா.ரஞ்சித். இது குறித்து வார இதழ் ஒன்றினுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,

சாதி ஒழிப்பில்லா தமிழ்த்தேசியம் வேண்டியதில்லை - இயக்குனர் ரஞ்சித்.!

“சாதியின் பெயரால் சக மனிதனை மனிதனே இங்கு அடக்குமுறைகளுக்கும், சொல்லொனா கொடுமைகளுக்கும் ஆளாக்குகிறார்கள். மனிதர்கள் இங்கே சமமாய் வாழ்ந்திடாமல், ஊரும் ; சேரியுமாய் பிரித்து வாழ்வியல் இடங்களை வகுத்து வைத்து வாழ்ந்துகொண்டிருக்கையில் இவற்றையெல்லாம் சீர்படுத்திட முனைந்திடாமல், சாதியின் – மதத்தின் பெயரால் ஒடுக்கப்படுகிறவர்களையும், ஒடுக்குகிறவர்களையும் ஒன்றாக ஒருங்கிணைத்து அமைக்கப்படுகிற சாதி ஒழிப்பில்லா தமிழ்த்தேசியம் வேண்டியதில்லை” என தெரிவித்துள்ளார்.