காசிமேடு அருகே நடுக்கடலில் 45நிமிடமாக உருவான மிகப்பெரிய சூறாவளிக்காற்றால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று சென்னை காசிமேடு பகுதி அருகே நடுக்கடலில் மிகப்பெரிய அளவிற்கு சுரவைக்காற்று ஒன்று உருவாகியுள்ளது. 45 நிமிடங்கள் நீடித்த சூறாவளிக்காற்றால் பொதுமக்கள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். இதுவரை அப்பகுதி மக்கள் இதுபோன்ற சூறாவளியை பார்த்ததில்லை என கூறியுள்ளனர். மேலும் இந்த சூறாவளியால் அங்குள்ள படகுகளுக்கு ஏதும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.
மிக உயரமான அளவிற்கு உருவாகியுள்ள இப்புயலை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.