தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு அந்த பொட்டலங்களை கொண்டு சென்றனர். இதன் காரணமாக திமுக மீது உரிமை குழு விசாரணை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள் திமுக தொடர்ந்த மேற்கண்ட வழக்கு மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திட கோரிய வழக்கு மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் எம்எல்ஏ வாக தொடர தடை கோரிய வழக்கு ஆகியன அடுத்த மாதம் 2 ஆம் ஒத்திவைக்கப்பதாக அறிவித்துள்ளனர்.