ஆரவின் படம் குறித்த அறிவிப்பு டுவிட்டரில்…

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய `சைத்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆரவ்.

அதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த அமோக வரவேற்பால் பிரபலமடைந்த ஈரவ், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலேயே தங்கியிருந்து, பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார்.

625.0.560.370.180.700.770.800.668.160.89100 நாட்கள் முடிந்து வெளியே வந்த ஆரவ் தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ்-க்கு பிறகு தனது முதல் படத்தை இயக்குநர் எஸ்.சரவணன் இயக்க இருப்பதாகவும், விஜய பார்கவி என்டர்டெயின்மெண்ட் அந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இயக்குநர் சரவணன், சிம்புவை வைத்து `சிலம்பாட்டம்’ படத்தையும், அடுத்ததாக `சிப்பாய்’ என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.