அண்மைக்காலமாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் செயற்பாடுகள் மற்றும் அவரின் தீர்ப்புகள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.
நீதிபதியின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள், அஞ்சாத மன உறுதி தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்களும் தமது ஆதரவினையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிருக பலி பூஜைக்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கி இருந்தார்.
300 வருடங்களாக காணப்பட்ட மிருக பலி பூஜையை தடை செய்ததன் மூலம் வலராற்று தீர்ப்பொன்றை வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளனர். எனினும் இவ்வாறான துணிவான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
அதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மக்களின் வணக்க ஸ்தலங்கள் தாக்கப்பட்டன. பல அநீதிகள் எடுக்கப்பட்டன. எனினும் அதனை தடுக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளால் முடியவில்லை.
தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ள நாட்டில் மதங்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்டாமல் ஆட்சியாளர்கள் இருந்து விட்டனர்.
எனினும் வடக்கில் செயற்படும் உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 300 வருடங்களாக காணப்பட்ட பலி பூஜையை தடை செய்து வலராற்று தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.
நீதிபதி தன் மதம் சார்ந்து தீர்ப்பு வழங்க சிந்திக்கவில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதில் எந்தவொரு அழுத்தத்தையும் பொருட்டாக எண்ணவில்லை. மிகவும் துணிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.
இன்றைய உலகம் நவீன தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறிச் செல்கின்றன. எனினும் இலங்கையில் மட்டும் மத கோட்பாடுகளில் சிக்கிய ஆட்சியாளர்கள் அதற்கிணைவாக ஆட்சியை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதி இளஞ்செழியன் ஒரு எழுத்துக்காட்டான நீதிபதி என தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.