மலேசியாவில் என்னை கொல்லப்போறாங்க என்று கதறிய தமிழர்: வெளிச்சத்திற்கு வந்த உண்மை தகவல்

தமிழகத்தின் இராமநாதபுரம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மெய்கண்டன், உச்சிபுளி அருகே குஞ்சாறுவளசை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் ஹோட்டலில் பணியாற்றுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா சென்றிருந்தார்.

மலேசியா சென்ற அவரை அவர்கள் அங்கு கொத்தடிமை போல் நடத்தியுள்ளனர். அதாவது தண்ணீர் மற்றும் உணவு எதுவும் கொடுக்காமலும், அதுமட்டுமின்றி தன்னுடைய ஊதியத்தை அவர் கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியும் உள்ளனர்.

இதனால் அந்த இளைஞர அவர்களிடமிருந்து தப்பித்து பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வீடியோ ஒன்றில் செல்வத்தை எதிர்த்து பேசியதால், அவர் கூலிப்படையினர் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (24)அப்படி நான் கொல்லப்பட்டால் அதற்கு செல்வம் தான் முழு பொறுப்பு என வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அந்த வீடியோ வைரலானதால், உயிர் பயத்தில் தவிக்கும் தனது கணவரை மீட்க வேண்டும் என்று அவரது மனைவி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் மலேசியாவில் ஓட்டல் தொழில் செய்துவரும் தமிழ் அமைப்பினர் உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று மெய்கண்டனை மீட்டனர்.

அதன் பின் இது குறித்து விசாரித்த போது மெய்கண்டன் கூறியது அனைத்துமே பொய் என்று தெரியவந்தது. மெய்கண்டன் கடந்த ஒரு மாதமாக ஹோட்டலுக்கு வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றியுள்ளார்.

அவ்வப்போது செலவுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கு வராததால் அவரை செல்வம் கண்டித்துள்ளார்.

இதையடுத்து மெய்கண்டன் செலவுக்கு 50 வெள்ளி தரும் படி தான் வேலை பார்க்கும் ஹோட்டலில் உள்ள கடை ஊழியரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரோ தர மறுத்ததால், மலேசியாவிலே உன் கடை இல்லாமல் செய்கிறேன் பார் என்று கூறி இது போன்ற பொய்யான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.