கனடாவின் பிரதான நெடுஞ்சாலையில் மீண்டும் கொடிய மோதல்!

மூன்று போக்கு வரத்து லாரிகள் சம்பந்தப்பட்ட கொடிய மோதல் நெடுஞ்சாலை 401ல் கேம்பரிட்ஜிற்கு அருகில் இன்று காலை நடந்துள்ளது. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். நெடுஞ்சாலை கிழக்கு சீட கிறீக் விதியில் மூடப்பட்டுள்ளது.

குறைந்தது ஒருவராவது அழிமானத்திற்குள் அகப்பட்டிருக்கலாம் என ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன் கெரி சிமித் தெரிவித்திருந்தார்.ஆனால் மனிதரொருவர் சம்பவ இடத்தில் இறந்து விட்டதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விபத்து நம்ப முடியாத அளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிமித் தெரிவித்தார்.

எல்லா இடங்களிலும் குப்பைகள் காணப்படுவதால் சுத்தப்படுத்த கால தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை. இருப்பினும் சாரதியின் கவனக்குறைவு காரணமாக இருக்கலாம் என சிமித் பரிந்துரைத்தார்.

காலை நேர விரைவான போக்குவரத்து மற்றும் கட்டுமான பகுதி போன்ற காரணங்களால் இவ்வாறு நினைக்க தோன்றுகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய டிரக் இறப்பு தொடர்பாக இடம் பெற்ற செய்தியாளர் மகாநாட்டில் பொலிஸ் ஆணையர் தெரிவித்திருந்தது போன்று இன்றய விபத்தும் கடந்த காலங்களில் நாங்கள் கண்டறிந்தமை போன்றதாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து டிரக் சாரதிகள் முற்றிலும் தடுக்க கூடிய அண்மைக்கால கவனக்குறைவு சம்பந்தப்பட்ட மோதல்கள் குறித்து வியாழக்கிழமை ஒன்ராறியோ மாகாண பொலி;ஸ் ஆணையர் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

மூன்று போக்குவரத்து லாரிகளின் சாரதிகளின் மீது புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதென அறிவித்திருந்தார். இவர்கள் மூவரும் வெவ்வேறு கொடிய நெடுஞ்சாலை விபத்துக்களில் சம்பந்தப்பட்டவர்கள்.

குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் ஆபத்தான பொதுத்தன்மை கொண்டிருந்ததெனவும் தெரிவித்துள்ளார். இதன் முடிவு ஒன்றிற்கும் மேற்பட்ட உயிர் இழப்புக்களிற்கு வழிவகுத்த பேரழிவு மிக்க விபத்து காட்சிகள் எனவும் தெரிவித்திருந்தார்.

2017ல் இதுவரை-நேற்றய தினம் வரை போக்குவரத்து டிரக்கினால் ஏற்பட்ட 56-விபத்துக்களில் கொல்லப்பட்டவரக்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது.

இன்றய சம்பவத்துடன் இந்த எண்ணிக்கை 68 ஆகின்றது.

Capturedgx CaptureAQEW3T

easwfd