சவூதியில் இருந்து 17 வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண்

சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சுமார் 17 வருடங்கள் சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் கடும் போராட்டத்திற்கு பின் நாடு திரும்பியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலாத்த அத்துகோரல ஆகியோரின் முயற்சியால், குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கே.ஜி.குசுமவாத்தி என்ற பெண், சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றிற்கு பணி பெண்ணாக சென்றதாக கூறப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக குடும்பத்திற்கு தகவல் கிடைக்காததன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

CaptureXDSFGS