மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதற்கமைய எதிர்வரும் மாத ஆரம்ப பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.