பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் இலங்கை சார்பில் பங்கு கொள்ளும் அணியில் மலையக இளைஞர் ஒருவரும் பங்குபற்றுகின்றார்.
தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்புகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 31ஆம் திகதி பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் ஆரம்பமாகவிருக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்திற்கு இலங்கையில் இருந்து 15 பேர் அடங்கிய குழாமினர் பயணமகின்றனர்.
இக்குழுவில் மலையக இளைஞர்களை பிரதிநித்துவப்படுத்தி டிக்கோயா போடைஸ் தோட்டத்தை சேர்ந்த பூபாலன் லஷந்தகுமார் பங்குப்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.