விமல் வீரவன்சவுக்கு மன நோய்; – அமைச்சர் தேவப்பெரும

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற மனநோய் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

விமல் வீரவன்சவின் ஆட்டத்தை மஹிந்தவின் ஆட்சிக்காலத்தின்போது எல்லா மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், தற்போது அவர் மிகவும் நல்லவர் போல பேசுகின்றார்.

ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கு அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார், அந்த விடயம் நாடாளுமன்றத்துக்கு குண்டு போடும் கதையிலிருந்தே தெரிகின்றது. அதனால்தான் நாடாளுமன்றம் கூடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு குண்டு போடுவது என அவர் கூறியதை சாதாரணமாக எடுக்கமுடியாது. ஏனெனில் இவ்வாறான விடயங்களில் அவர் கைதேர்ந்தவர்.

மஹிந்தவின் ஆட்சியில் இருக்கும்போது அரச சொத்துகளை சேதப்படுத்தியமை, கொலைசெய்தமை போன்றவற்றை எல்லாம் மறந்து தற்போது பேசுகிறார். நாய் வாலை நிமிர்த்த முடியாததுபோல தான் விமல் வீரவன்சவையும் திருத்தவே முடியாது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

THEWARPPERUMA-626x380