உங்கள் வங்கிக்கணக்கில் தவறுதலாக சுமார் 24 மில்லியன் டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்?
அப்படியான சம்பவம் சிட்னியிலுள்ள Clare Wainwright என்ற இளம் வக்கீலுக்கு நடந்திருக்கிறது.
ஒருநாள் காலை தனது NAB வங்கிக்கணக்கைத் திறந்து பார்த்த Clare Wainwright, தனது வீட்டுக்கடன் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டிருந்ததோடு மேலதிகமாக $24,544,780.16 டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தனக்குச் சொந்தமில்லாத அந்தப் பணத்தை பயன்படுத்தினால் அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை அறிந்திருந்த Clare Wainwright, உடனடியாக தன்னுடைய NAB வீட்டுக்கடன் முகவரைத் தொடர்பு கொண்டு, வங்கிக்கு இவ்விடயத்தைத் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளார்.
அதன்பின்னர் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த வங்கி அதிகாரிகள், குறித்த பணம் தவறுதலாக Clare Wainwright-வின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறி அப்பணத்தை மீளப் பெற்றுவிட்டனர்.
இதேவேளை ஒருநாள் மில்லியனராக வாழ்ந்த தான் மீண்டும் பழையநிலைக்கே திரும்பிவிட்டதாக Clare Wainwright புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.