திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணியளவில் இந்தியாவிற்குப் பயணமாகியுள்ளார் .
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இன்று இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பௌத்த, கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.