திமுக தலைவர் கருணாநிதி ஒரு வருட ஓய்வுக்கு பின்னர் தனது கொள்ளுப்பேரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார், இந்நிலையில் முதன்முறையாக கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி பவளவிழா கண்காட்சி அரங்கை சமீபத்தில் பார்வையிட்டார்.
தற்போது, மீண்டும் தனது கொள்ளுப்பேரனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் கொள்ளு பேரன் மனுரஞ்சித்திற்கும் நவம்பர் 1 ஆம் திகதி சென்னையில் திருமணம் நடக்கவிருக்கிறது.
இந்த திருமணத்தில் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.