நுகேகொட பகுதியில் பாலத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தில் துவாய் மாத்திரம் அணிந்து நின்று கொண்டிருந்த இளைஞன் பஸ்ஸில் ஏறியதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞன் துவாய் மாத்திரம் அணிந்து பஸ் நிலையத்தில் கோட்டை பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார் குறித்த பஸ் வந்ததும் பஸ்ஸிற்குள் நுழைந்துள்ளார்.
பஸ்ஸிற்குள் இருந்த சில இளைஞர்களுடன் குறித்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. துவாய் மாத்திரம் அணிந்து வந்தமையினால் அந்த நபரை பஸ்ஸில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருப்பதனால் பஸ்ஸை விட்டு வெளியேறுமாறு குறித்த நபருக்கு இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தான் விரும்பியதனை போன்று வீதியில் செல்வதற்கான உரிமை தனக்கு உள்ளதாகவும், உடம்பின் மேல் பகுதியில் மாத்திரம் ஆடை இல்லாமல் செல்வதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது உடல் அழகானதென்பதனால் மூடி மறைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர் வாதிட்டுள்ளார்.
இருப்பினும் கடுமையான எதிர்ப்பின் பின்னர் குறித்த நபரை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.