நாட்டின் பல பிரதேசங்களில் நாளைய தினம் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாளைய தினத்தை தொடர்ந்து நாட்டில் மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டின் பல பிரதேசங்களில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதன்போது சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.