துபாய் : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்பும் பின்பும் ஒருங்கிணைப்புச் சிக்கல்களால் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்பார்ப்பு மிகுந்த படத்திற்கான ஏற்பாட்டை இப்படி கவனமின்றியா நடத்துவது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்த ‘2.ஓ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினர் லைவ்வாக ‘2.ஓ’ பாடலுக்கு இசைத்தனர்.
பல முன்னணி திரையுலகினர் பங்குபெற்ற இந்த விழாவில் சரியாக ஒருங்கிணைக்கப்படாமல் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ப்ரொமோஷனுக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்த லைகா நிறுவனம் இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.