பிரித்தானிய இளவரசர் ஹரி தனது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மெர்க்கலை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
இவர்களது திருமணம் எப்போது என்று அறிவிக்கப்படாத நிலையில், இருவரும் பொது இடங்களில் ஜாலியாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இவர்களது புகைப்படங்கள் மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்தது சில தகவல்களும் வெளியாகும், தற்போது okmagazine.com என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தியில், மெர்க்கல் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது தனியாக வசித்து வாழும் மெர்க்கல் விரைவில் தனது கணவரின் இல்லத்திற்கு செல்லவிருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால், இளவரசர் ஹரி தந்தையாகவிருக்கிறாரா என்ற தகவலை அரச குடும்பம் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.