வாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு அதிரடிப் படை பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் 10 ற்க்கும் மேற்பட்ட பொலிஸார் உள்ளடங்குவதுடன் குடாநாட்டில் வாள்வெட்டு முகமூடிக் கொள்ளை அடாவடிகளில் ஈடுபடுவோரை இக் குழு தேடித் தேடிக் கைது செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டில் மேற்குறித்த குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.