எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் அதை பல பெண்களுக்கு பரப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த ‘வாலெண்டினோ டலுடோ’ என்ற நபருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது பரிசோதனையில் தெரிந்துள்ளது.
தனக்கு எய்ட்ஸ் நோய் இப்போது தெரிந்தும், பல பெண்களுடன் முறையற்ற உடலுறவு கொண்டிருக்கிறான்.
சோசியல் மீடியாக்கள் மூலம், பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான்.
இதனால், 40 க்கும் மேற்பட்ட பெண்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில், எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் அதை பரப்பிய குற்றத்திற்காக அந்த நபருக்கு 24 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.