இரு பெண்களின் மோசமான செயற்பாடு: கண்காணிப்பு கமராவினால் சிக்கினர்

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று வர்த்தக நிலையமொன்றிட்கு சென்று திருட்டில் ஈடுபட்டுவரும் இரு பெண்களின் செயற்பாடுகள் கண்காணிப்பு கமாராவின் உதவியுடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.

வவுனியா மத்திய பேருந்து நிலையங்களிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற இரு பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கோரியுள்ளனர்.

இந்த நிலையில் உரிமையாளர் தண்ணீர் எடுக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் வர்த்தக நிலையங்களிலுள்ள பொருட்களை திருடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதேபோல பல வர்த்தக நிலையங்களில் உணவுப் பண்டங்களை திருடும் பெண்களைக் கண்டால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருந்து கொள்ளுமாறும், இவ்வாறானவர்களை வர்த்தக நிலையங்களுக்குள் எடுக்கவேண்டாம் என்று பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Capturecgnjcvn