இலங்கை பொலிஸாரை ஏமாற்றி அலைய விட்ட வெளிநாட்டவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கைக்கு வருகைத்தந்த வெளிநாட்டவர் ஒருவரிடம் போதைப்பொருள் இருப்பதாக குற்ற விசாரணை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய குறித்த வெளிநாட்டரின் பையை சோதனையிட்ட போது சூடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது குற்ற விசாரணை அதிகாரிகளின் அடையாள அட்டை தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே வெளிநாட்டவர் பொலிஸ் நிலையம் செல்வதனை நிராகரித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பின்னர் விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பி அவர் தனது ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார். எனினும் பொலிஸார் அவரது அறைக்கு சென்று அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அங்கு நடந்த சம்பவத்தை பேஸ்புக் நேரலையில் காட்டியுள்ளார். அவர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்தியுள்ளார்.
எப்படியிருப்பினும் குறித்த வெளிநாட்டவரின் பையை சோதனையிட்ட போது அதிலிருந்து வல்லப்பட்டடை தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் தண்டப்பணம் வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.